உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மசியும் அளவிற்கு வேக விடவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அத்துடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
ஆலு சப்பாத்தி செய்முறை
250 கி மாவை அகலமான கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான பால் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அத்துடன் உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.மீதமுள்ள 50 கி மாவைத் தூவி, தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து 1 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
மாவு ஊறுவதற்கு காத்திருக்கும் நேரத்தில் உள்ளே வைக்கும் பூரணத்தை தயாரிக்கவும்.
ஒரு மணி நேரத்திற்குப் பின் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து 4-5 செமீ விட்டமுள்ள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எவ்வளவு உருண்டைகள் வருகிறதோ அவ்வளவையும் தயார் செய்து கொள்ளவும்.
சப்பாத்திப் பலகையை எடுத்துக் கொள்ளவும்.
அதன் மீது பரவலாக மாவைத் தூவிக் கொள்ளவும்.
உருண்டையை எடுத்து மாவில் புரட்டிக் கொண்டு சப்பாத்திக் கட்டையால் 4 இஞ்ச் அகலமுள்ள சப்பாத்திகளாக இடவும்.
அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு பூரணத்தை வைத்து சப்பாத்தியின் எல்லா முனைகளையும் சேர்த்து மூடி திரும்பவும் உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
இந்த உருண்டைகளை திரும்பவும் 9-10 இஞ்ச் விட்டமுள்ள சப்பாத்திகளாகத் திரட்டவும்.
இந்த சப்பாத்திகளை சூடான தோசைக்கல்லில் இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் வைத்து சுட்டெடுக்கவும்.
இப்போது ஆலு சப்பாத்தி தயார்.
Notes:
ஒரு கப் தயிரில் 1 டீ ஸ்பூன் ஊறுகாயை கலக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். இது ஆலூ சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.