ஆலு கோபி
| |
|
|
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
|
Ingredients: |
- உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 3 (300 கிராம்)
- காலிபிளவர் (சிறியது) - 1 (300 கிராம்)
- வெங்காயம் - 250 கிராம் (அல்லது) 3 பெரியது
- தக்காளி - 250 கிராம் (அல்லது) 4
- தக்காளி ப்யூரி - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- 2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
- கொத்தமல்லித் தழை (சிறியதாக நறுக்கியது) - 1/2 டீஸ்பூன்
மசாலா பொடிகள் - மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலாப்பொடி - 3/4 - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
|
Method: |
- காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி சூடான நீரில் போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- உருளைக்கிழங்கு வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடு செய்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் தவிர மீதமுள்ள எண்ணெய் எல்லாவற்றையும் விடவும்.
- உருளைக்கிழங்கை வாணலியில் போட்டு நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். இதற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகும்.
- வறுத்த உருளைக்கிழங்கை வாணலியில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே எண்ணெயில் காலிபிளவர் போட்டு 3 முதல் 4 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது அதே வாணலியில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 7 முதல் 8 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
- இத்துடன் தக்காளி மற்றும் எல்லா மசாலாப் பொடிகளையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவரை சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- இக்கலவையுடன் 200 மிலி தண்ணீர், 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும், கலவை கொதிக்க ஆரம்பித்த உடன் தீயைக் குறைத்து, குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
- இப்போது ஆலு கோபி தயார்
|