பசலிக் கீரை ஆட்டுக்கறி மசாலா
| |
|
|
பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் . |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- மட்டன் - 500 கிராம்
- கீரை - 300 கிராம்
- வெங்காயம் - 150 கிராம்
- தக்காளி - 2
- இஞ்சி - பூண்டு கலவை - 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1 ( தேவைப்பட்டால்)
- இலவங்க பட்டை - 1" நீளம் கொண்டது
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி மற்றும் 2 மேஜைக்கரண்டி
- தக்காளி விழுது - 1 தேக்கரண்டி ( தேவைப்பட்டால்)
- உப்பு - சுவைக்காக
- தண்ணீர் - தேவையான அளவு
மசாலா பொடிகள்: - மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
|
Method: |
- கீரை இலைகளை நறுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெயை ஊற்றிக் சூடாக்கவும்.
- இலவங்க பட்டை மற்றும் வெங்காயத்தை 4-5 நிமிடங்கள் வறுக்கவும். இஞ்சி - பூண்டு கலவை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும்.
- மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி 2-3 நிமிடங்கள் சமைக்கவும். குக்கரை மூடி மிதமான சூட்டில் சமைக்கவும். முதல் விசில் அடித்ததும், சூட்டைக் குறைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும். ஆவி சென்ற பின் மூடியை திறக்கவும்.
- கீரை இலைகள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
- இன்னும் சில நிமிடங்களுக்கு கறியை மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை காய்க்கவும். கறி குக்கரில் அடியில் ஒட்டிக் கொள்ளத் தொடங்கினால் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
|
Notes: |
இந்த உணவு சப்பாத்தி/நாண் உடன் உண்ண சுவையாக இருக்கும். மாற்றத்திற்கு <a href="/recipes/Spinach-Chicken-curry">பசலிக் கீரை சிக்கன் மசாலா</a>, <a href="/recipes/Beetroot-Mutton-masala">பீட்ரூட் மட்டன் மசாலா</a> அல்லது <a href="/recipes/Potato-Mutton-masala">உருளைக்கிழங்கு மட்டன் மசாலா</a> ஆகியவற்றை செய்து பார்க்கலாம். |