இட்லி தோசை சாம்பார்
recipe Image
 
அரைத்து செய்த சாம்பார் மற்ற சாம்பாரை விட சுவை அதிகம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • துவரம்பருப்பு - 150 கிராம் அல்லது 2/3 கப்
  • சின்ன வெங்காயம் - 12-14 அல்லது 1 வெங்காயம் சிறியது
  • பூண்டு - 1 பல் சிறியது
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
  • நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  • வெதுவெதுப்பான தண்ணீர் - 150 மி.லி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காய தூள் - 1 சிட்டிகை
  • கொத்துமல்லி இலை - 2-3 கொத்து
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப
  • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (விரும்பினால்) அல்லது கீழ் உள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்க

வறுத்து அரைக்கத் தேவையான பொருட்கள்

  • தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
  • காய்ந்த சிவப்பு மிளகாய் - 3-4
  • தனியா - 3 தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
Method:
  1. பருப்பை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. புளியை நன்றாக கழுவி , வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை கழுவி கொள்ளவும்.
  4. மேற்கூறப்பட்ட பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும், எளிதான முறைக்கு சாம்பார் பொடியை பயன்படுத்தலாம்.
  5. அடுப்பில் பிரஷர் குக்கர் பாத்திரத்தை வைத்து சூடுபடுத்தவும்.
  6. ** பருப்பு, 300 மிலி தண்ணீர், பூண்டு மற்றும் மஞ்சள் தூளை போடவும்.
  7. ** பாத்திரத்தை மூடிவைத்து வேகவைக்கவும். 2-3 விசில் வந்தவுடன் அடுப்பை அனைத்து பிரஷர் போனபிறகு திறக்கவும்.
  8. பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  9. தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்றாக பிழிந்து புளி சாறை எடுத்து வைக்கவும் .
  10. சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
  11. சட்டியில் பாதி எண்ணெய் விடவும்.
  12. வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
  13. புளி சாற்றை அதில் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 6-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  14. பின்னர் இந்தக் கலவையை பருப்பு உள்ள பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
  15. நெய் மற்றும் நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும்.
  16. சிறிய தாளிக்கும் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி, மீதமிருக்கும் எண்ணெய் விடவும்.
  17. எண்ணெய் சூடானவுடன் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாயை போடவும்.
  18. கடுகு வெடிக்கத் தொடங்கியதும் அதில் அரைத்த பொருட்களை அல்லது சாம்பார் பொடியை போட்டு வறுக்கவும்.
  19. தாளித்த பொருட்களை பருப்பு உள்ள பாத்திரத்தில் கொட்டி பாத்திரத்தை மூடி 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  20. இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சாம்பார் தயார்.
Notes:
இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடும் சாம்பாருக்கு <a href="/recipes/Sambar">இங்கே </a> கிளிக் செய்யவும். ஒரு கப் என்பது 250மி.லி தண்ணீர் பிடிக்கும் அளவு கொண்டது.