பட்டர் சிக்கன்
| |
|
|
பட்டர் சிக்கன் சப்பாத்தி, நாண் அல்லது எந்தவகை கோதுமை ரொட்டிக்கும் ருசியாக இருக்கும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
|
Ingredients: |
- எலும்பற்ற கோழிக்கறி - 750 கிராம் - சிறு துண்டுகளாக வெட்டியது
- இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
மசாலா பொடிகள்: - மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1& 1/2 தேக்கரண்டி அல்லது 2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பட்டர் சாறு செய்யத் தேவையானப் பொருட்கள்: - வெண்ணெய் - 100 கிராம்
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- வெங்காயம் - 300 கிராம் அல்லது 2 நடுத்தர அளவு
- பச்சை மிளகாய் - 1 (விருப்பமானால்)
- தக்காளி - 450 கிராம் அல்லது 6
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- கிரீம் – 3 மேசைக்கரண்டி (விருப்பமானால்)
- அரைத்த முந்திரி - 50 கிராம்
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
|
Method: |
- இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் கோழிக்கறியை ஊறவைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை வெட்டவும்.
- அடுப்பில், மிதமான வெப்பத்தில், ஓர் கடாயை சூடாக்கி, எண்ணெயைச் சேர்க்கவும்.
- எண்ணெய் போதுமான வெப்பமடைந்ததும், வெட்டிய வெங்காயம் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்கள் வதக்கவும், கடாயிலிருந்து, ஒரு துளையிட்ட வறுக்கும் கரண்டியால் அவற்றை நீக்கி, குளிர வைக்கவும்.
- கடாயில் வெண்ணெய், தக்காளி, மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து சுமார் 3-4 நிமிடங்கள் மூடாமல் சமைக்கவும். அடுப்பினை அணைக்கவும். கடாயிலிருந்து, ஒரு துளையிட்ட வறுக்கும் கரண்டியால் அவற்றை நீக்கி, போதுமான அளவு குளிர்ந்ததும், அவற்றை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அரைக்கவும்.
- அதே கடாயில் ஊறவைத்தக் கோழித் துண்டுகள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, அவை லேசான பழுப்பு நிறமாகும் வரை, சுமார் 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
- வறுத்த கோழித் துண்டுகள் உள்ள கடாயில், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து, மேலும் 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
- சுவைக்கு ஏற்ப (சுமார் 1 தேக்கரண்டி உப்பு) உப்பு சேர்க்கவும்.
- கிரீம், அரைத்த முந்திரி மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அதை சுமார் 3-4 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
- கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
சப்பாத்தி/ நாண் /பரோட்டா அல்லது எந்தவகை கோதுமை ரொட்டி க்கும் ஏற்றது. மாறுபாட்டிற்கு,<a href="/recipes/Channa-masala">கொண்டைக்கடலை மசாலா</a>, <a href="/recipes/Paneer-butter-masala">பன்னீர் பட்டர் மசாலா</a>, <a href="/recipes/bhindi-masala"> வெண்டிக்காய் மசாலா </a>அல்லது<a href="/recipes/Aloo-Gobi">ஆலு கோபி</a> ஆகியவற்றை முயற்சிக்கவும். |
|