புளி சட்னி
recipe Image
 
காரமான புளிப்பான புளி சட்னி பல வித பலகாரத்திற்கு சைடு டிஷ் ஆகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
 • நறுக்கிய கொத்தமல்லி இலை – 3 மேசைக்கரண்டி
 • நறுக்கிய புதினா – 3 மேசைக்கரண்டி
 • நறுக்கிய கறிவேப்பிலை – 1 மேசைக்கரண்டி ( விரும்பினால் )
 • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
 • புளி – 1"அளவு உருண்டை
 • வெங்காயம் – ½ நடுத்தர அளவு அல்லது சின்ன வெங்காயம் - 10
 • பூண்டு – 1 பல்லு
 • பச்சை மிளகாய் – 1 மிதமான காரத்துக்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
 • எண்ணெய் – 1 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்கேற்ப
 • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
 1. கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்
 2. பூண்டை உரித்துக்கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.
 3. புளியைக் கழுவி 1 மேசைக்கரண்டி தண்ணீரில் ஊற வைக்கவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, துருவிய தேங்காயை 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
 5. கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம், பூண்டு, புளி மற்றும் புளித் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து 1-2 நிமிடங்கள் அரைக்கவும்.
 6. அதில் வெங்காயம், வருத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். தேவைப்பட்டால் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
 7. புளி சட்னி தயார்.
Notes:
புளிக்கு பதிலாக ஆம்ச்சூர் ( மாங்காய் ) பொடி / 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இது, சமோசா, <a href="/recipes/Rice-porridge">கஞ்சி சோறு</a> மற்றும் <a href="/recipes/Rice-porridge-02">நோன்பு கஞ்சிக்கு</a> நல்ல சைடு டிஷ் ஆகும்.