தாலி சால்னா
recipe Image
 
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 45-60 நிமிடங்கள்

Ingredients:
  • 600 கிராம் ஆட்டு இறைச்சி - பெரிய துண்டுகள்
  • 4 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 300 கிராம் சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது (விரும்பினால்)
  • பூண்டு - 12 பற்கள் + 7 பற்கள் இறுதியில்
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • சுவைக்கேற்ப உப்பு

மசாலா பொடிகள்:

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்த் தூள்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்

வறுத்து அரைக்கப்பட வேண்டிய பொருட்கள்:

  • 4 தேக்கரண்டி பச்சரிசி
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 3 மேசைக்கரண்டி கொத்தமல்லி
Method:
  1. வெங்காயம் முழுவதையும் நறுக்கிக் கொள்ளவும்; பூண்டை உறித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ப்ரெஷர் குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.எண்ணெய் சூடான பிறகு, ஜீரகம், வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  3. எண்ணெயில் வெங்காயம் மற்றும் 12 பற்கள் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும்.
  4. மசாலாப் பொடிகள் மற்றும் இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
  5. இறைச்சி முழுவதும் மூழ்கும் படி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். சட்டியை மூடி, மிதமான சூட்டில் வைக்கவும்.
  6. முதல் விசிலுக்குப் பிறகு, சூட்டைக் குறைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும்.
  7. இறைச்சி வேகும்போது, அரிசியையும் மிளகையும் மிதமான சூட்டில் வைத்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும். இது ஆறும் வரை தனியாக வைத்து விடவும். பிறகு இதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  8. பிறகு 7-8 நிமிடங்கள் கொத்தமல்லியை மிதமான சூட்டில் வைத்து சரியான பதம் வரும் வரை வறுக்கவும். தீயாமல் இருக்குமாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். ஆறிய பிறகு, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  9. நசுக்கிய 7 பூண்டுப் பற்களை, வறுத்த கொத்தமல்லியுடன் சேர்த்து இடிக்கவும். இதை குழம்பில் சேர்க்கவும்.
  10. வறுத்து அரைத்த அரிசி மற்றும் மிளகையும், 2 தேக்கரண்டி அரிசி மாவையும் குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். நன்றாகக் கலக்கவும்.
  11. குழம்பு மிகவும் அடர்த்தியாக இருந்தால், தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  12. சட்டியை மூடி, பூண்டு வேகும்வரை நன்றாக கொதிக்க விடவும்.
Notes:
இது சாதம்/<a href="/recipes/Ghee-Butter-Rice">நெய்சாதம்</a>, இடியாப்பம், இட்லி, தோசை மற்றும் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையான குழம்பாகும். இறைச்சியை சமைக்கும் நேரம் பல்வேறு காரணங்களால் மாறலாம். இது வழிகாட்டுதல் மட்டுமே.