கூர்க் சிக்கன் ப்ரை
recipe Image
 
கூர்க் சிக்கன் ப்ரை இந்திய மசாலாக்கள் கொண்டு சுக்காவாக செய்யப்படும் சுவையான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Marination Time :2-3 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • சிறிதாக வெட்டிய எலும்பில்லா சிக்கன் – 5௦௦ கிராம்
  • வெங்காயம் – 150 கிராம்
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் – 50 மில்லி அல்லது 3 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை –1 கொத்து
  • துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப

ஊறவைக்க தேவையான பொருட்கள்

  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – 1 inch நீளம் அல்லது 1 inch அகல துண்டு
  • பூண்டு – 5 பல்லு
  • ஜீரகம் – 1 தேக்கரண்டி
  • மிளகு – 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 ½ மேசைக்கரண்டி
Method:
  1. ஊறவைக்க தேவையான பொருட்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மென்மையான பசையாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த பசையில் சிக்கன் துண்டுகளையும் உப்பையும் சேர்த்து 2-3 மணி நேரம் ஊற விடவும்.
  3. வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும். கருவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் மற்றும் பாதியளவு கருவேப்பிலை சேர்த்து 4-5 நிமிடங்கள் வறுக்கவும்.
  6. சிக்கன் துண்டுகள் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும். கலக்கி மூடி வைத்து 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
  7. தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்.
  8. எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  9. கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்.
  10. கூர்க் சிக்கன் ப்ரை பரிமாறத் தயார்