காளிப்ளவர் வறுவல்
recipe Image
 
காளிப்ளவரால் ஆன ஒரு சைடு டிஷ். இதன் மெல்லிய சுவை விசேஷங்களுக்கு ஏற்றது. கோபி 65 என்றும் இதை அழைக்கலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :30 நிமிடங்கள் - 1 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • காளிப்ளவர் - 1 சிறியது
  • சமையல் எண்ணெய் – 35௦ மில்லி வறுக்க

மாவுக்கு தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • தந்தூரி மசாலா தூள் – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • ஆரஞ்சு கலர் – சிறிதளவு (விரும்பினால்)
  • தயிர் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • முட்டை – 1
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
Method:
  1. காளிப்ளவரை சிறு பூக்களாக வெட்டிக் கொள்ளவும்.
  2. கழுவி வெந்நீரில் போட்டு 5 நிமிடங்கள் வைத்து சுத்தமாக்கவும்.
  3. மாவுக்கு தேவையான பொருட்களை ஒன்றாக சேர்க்கவும்.
  4. மாவில் காளிப்ளவர் பூக்களை போடவும்.
  5. 3௦ நிமிடங்கள் ஊற விடவும்.
  6. அவை மொருமொருப்பாகும் வரை எண்ணெயில் பொரிக்கவும்.
  7. எண்ணெய் வடிந்ததும் பரிமாறவும்.