முட்டை மசாலா
| |
|
|
கஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
2-3
|
Ingredients: |
- முட்டை - 3
- வெங்காயம் - 2 சிறியது (பொடிசாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி இலை - சிறிதளவு அலங்கரிக்க
மசாலா தூள்கள்: - மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
|
Method: |
- வெங்காயம் மற்றும் மிளகாயை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்
- தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.
- முட்டையை நன்றாக அடித்து, இஞ்சி–பூண்டு விழுது மற்றும் அரைத்த தேங்காயை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
- மிதமான சூட்டில் கடாயை சூடுபடுத்தி எண்ணெயை சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை எண்ணையில் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
- அனைத்து மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- முட்டை கலவையையும் ½ கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- தீயை குறைத்து 4-5 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
|
Notes: |
இது தோசையுடன் சாப்பிட ஏற்றது. |