முழு பாசிப் பயிறு மசாலா
recipe Image
 
ப்ரோட்டின் நிறைந்த சத்தான முழு பாசிப் பயி றை பயன்படுத்தி எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :ஓர் இரவு முழுவதும் Soaking Time :

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • முழு பாசிப் பயிறு – 200 கிராம் அல்லது 1 டீ கப் (250 மில்லி)
  • வெங்காயம் – 150 கிராம்
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் – 1
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • நெய் – 2 தேக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
  1. முழு பாசிப் பயிறை ஓர் இரவு ஊற வைத்து வடிகட்டவும்.
  2. வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  3. பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  6. தக்காளி மற்றும் அனைத்து மசாலாத் தூள்களையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  7. ஊற வைத்த முழு பாசி பயிறை சேர்க்கவும். மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் மூடியை திறந்து வேக வைக்கவும்.
  8. 15௦ மில்லி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 1௦ நிமிடங்கள் சமைக்கவும்.
  9. மூடியைத் திறந்து மசாலாவின் பதத்தை சரி பார்க்கவும். கெட்டியாக இருந்தால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நீர்த்து இருந்தால், சரியான பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  10. நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  11. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்
Notes:
இதை சப்பாத்தி/ நாண்/ கோதுமை/மைதா தோசையுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <ahref="/recipes/Dal">பருப்பு</a>,<ahref="/recipes/Cowpeas-pinto-beans-masala">முழு தட்டப் பயிறு மசாலா</a><ahref="/recipes/Spinach-Dal-Curry">கீரை-பருப்பு குழம்பு</a> ஆகியவற்றை முயற்சிக்கலாம்.