கோலா உருண்டை
| |
|
|
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ். |
|
Preparation Time : 20-30 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
|
Ingredients: |
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 250 மில்லி பொரிக்க
அரைக்க வேண்டியவை: - கொத்து இறைச்சி(கைமா) – 300 கிராம்
- நறுக்கிய வெங்காயம் – 6 மேசைக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3
- பட்டை – 1” நீள துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- கசகசா – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- துருவிய தேங்காய் – 5 மேசைக்கரண்டி
- பொட்டு கடலை – 4 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
|
Method: |
- வெங்காயம், மிளகாய் மற்றும் தேங்காயை பெரிதாகவும், கொத்தமல்லியை சிறிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- கைமாவை அலசி வடிக்கட்டவும்.
- பொட்டு கடலை, பட்டை, கிராம்பு, தோல் இல்லாத ஏலக்காய், கசகசாவை தண்ணீர் இல்லாமல் அரைக்த்து தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள அனைத்து அரைக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். கறி அரைபடவில்லை எனில், 2 பாகமாக பிரித்து அரைக்கவும்.
- அரைத்த கறி, அரைத்த பொட்டு கடலை போடி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அவற்றை 3cm பந்துகளாக பிடித்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- 5-6 கறி உருண்டைகளை ஒரே நேரத்தில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
|
Notes: |
இதை, விருந்துகளில் பசி உண்டாக்கும் உணவாக அல்லது மதிய உணவு/ இரவு உணவில் சைடு-டிஷ்ஷாகவும் பரிமாறலாம். |
|