மட்டன் சூப்
recipe Image
 
காரமான மற்றும் சுவையான மட்டன் சூப், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு, மூக்கடைப்பு நீங்க செய்து கொடுக்கலாம். இது, பசி உண்டாக்கும் உணவாகவும் சமைக்கலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • எலும்புடன் கூடிய ஆட்டுக் கறி – 500 கிராம்
  • வெங்காயம் – 1 சிறியது
  • தக்காளி – 1 சிறியது
  • பச்சை மிளகாய் – 1 நடுத்தர காரத்துக்கு அல்லது
  • 2 அதிக காரத்துக்கு
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
  • ஜீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
Method:
  1. அனைத்து வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  2. மிளகை நுணுக்கிக் கொள்ளவும்; கறியைக் கழுவிக் கொள்ளவும்.
  3. 3-4லிட்டர் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  4. எண்ணெய் சூடானதும், சீரகம், நுணுக்கிய மிளகு சேர்த்து வறுக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வதக்கவும்.
  6. மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  7. அனைத்து மசாலாத் தூள்கள், நறுக்கிய வெங்காயம் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
  8. 4௦௦ மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  9. மூடி வைத்து மிதமான சூட்டில் சமைக்கவும்.
  10. ஒரு விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
  11. நறுக்கிய கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
ஆட்டின் கழுத்து/ விலா/ தோள் ஆகிய பகுதிகள் மென்மையாக இருப்பதால் அவை இந்த வகை சூப்புக்கு ஏற்றது. மாற்றத்திற்கு <a href=”/recipes/spicy-chicken soup”>சிக்கன் சூப்பை </a> முயற்சிக்கவும். அடுப்பின் வேகம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.