பனீர் பட்டர் மசாலா
recipe Image
 
பனீர் பட்டர் மசாலா, பனீர் மற்றும் இந்திய மசலாக்களால் ஆன ஒரு சுவையான சைவ சைடு-டிஷ்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • பனீர் – 3௦௦ கிராம்
  • கார்ன் ப்ளோர் மாவு – 1 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் – 60 கிராம் அல்லது 5 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 200 கிராம்
  • தக்காளி – 4 சிறியது
  • தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி-பூண்டு விழுது – 11/2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • கிரீம் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • முந்திரி – 25 கிராம் (விரும்பினால்)
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
  • சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை நறுக்கியது – 1/2 மேசைக்கரண்டி

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
  • ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
  1. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  2. முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பனீரை 2 cm துண்டுகளாக வெட்டி, கார்ன் ப்ளோர் மாவு அல்லது ஏதேனும் மாவால் பிரட்டவும்.
  3. அடுப்பு அருகில் சற்று வெதுவெதுப்பான தண்ணீர் வைக்கவும்.
  4. தவாவை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  5. பனீர் துண்டுகளை தவாவில் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவற்றை நீக்கி, ஒரு தண்ணீர் பாத்திரத்தில் வைக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து 7-8 நிமிடங்கள், அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  7. அவற்றை தவாவில் இருந்து நீக்கி, ஆறியதும் நறுக்கிய தக்காளியுடன் அரைக்கவும்.
  8. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  9. அனைத்து மசாலாத் தூள்களும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  10. அரைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
  11. பனீர், சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். அவற்றை மசாலாவில் மூடி இல்லாமல் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  12. 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்; மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பைக் குறைத்து மூடி வைத்து 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.
  13. அரைத்த முந்திரியை சேர்க்கவும்.
  14. தேவைப்பட்டால், அதிக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  15. அடுப்பை அணைத்த பின் இறுதியில், கிரீம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  16. கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
பனீர் பட்டர் மசாலா, சப்பாத்தி மற்றும் நாண் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <a href=”/recipes/channa masala”>சன்னா மசாலா</a>, <a href=”/recipes/Aloo-Gobi”>ஆளு-கோபி</a>, <a href=”/recipes/Bhindi-masala”> வெண்டிக்காய் மசாலா</a> அல்லது <a href=”/recipes/Bartha”>பர்தா</a> முயற்சிக்கலாம்.