கஞ்சி சோறு
recipe Image
 
கஞ்சி சோறு நாளின் துவக்கத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். கீழ்க்காணும் முறையில் இதனை எளிதாக தயாரிக்கலாம்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • அரிசி குருணை 250 கிராம்
  • வெந்தயம் 1 டீஸ்பூன்
  • பூண்டு 2 - 3 பற்கள்
  • டின் தேங்காய் பால் 3 டேபில் ஸ்பூன் அல்லது 100ml தேங்காய்பால்
  • தண்ணீர் தேவையான அளவு
Method:
  1. அரிசி குருணையை நன்றாக கழுவி காய வைக்கவும்
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் 750 மில்லி தண்ணீரை விடவும்.
  3. அதில் அரிசி குருணை, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போடவும்.
  4. பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
  5. முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 - 8 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  6. அடுப்பை அணைக்கவும். பின்னர் பிரஷர் அடங்கிய பின் திறக்கவும்.
  7. அதில் தேங்காய் பாலை விட்டு 2 - 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
Notes:
<a href="/recipes/lentil-chutney">பருப்பு துவையல்</a> மற்றும் <a href="/recipes/Tamarind-chutney">கொத்தமல்லி/புளி ச ட்னி</a>யுடன் கஞ்சிசோறு சாப்பிட சுவையாக இருக்கும்.