பிரொக்கோலி மஷ்ரூம் பொரியல்
| |
|
|
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும் |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
|
Ingredients: |
- பிரொக்கோலி -1 சிறியது
- மஷ்ரூம் - 200 கிராம்
- பூண்டு - 3 சிறிய பல்லு
- காய்ந்த மிளகாய் - 1 - சிறு சிறு துண்டுகளாக கிள்ளிக் கொள்ளவும்
- வெங்காயம் வெட்டியது - 1 மேசை கரண்டி (தேவை பட்டால் )
- சோயா சாஸ் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் - 1 மேசை கரண்டி
- எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
|
Method: |
- காய்கறியை கழுவி கொள்ளவும்.
- பிரொக்கோலியை சிறிய பூக்களாகவும், மஷ்ரூமை 4 துண்டுகளாகவும், வெங்கயத்தை பெரிதாகவும், பூண்டை பொடியாகவும் வெட்டிக் கொள்ளவும்.
- பிரொக்கோலியை ஒரு பாத்திரத்தில் போட்டு வெண்ணீர் ஊற்றி 2-3 நிமிடம் காத்திருந்து வடிகட்டவும்.
- வேகமான சூட்டில் அடுப்பை பற்ற வைத்து, பெரிய கடாயை வைக்கவும்.
- எண்ணெய் ஊற்றி சூடானவுடன், வெட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பிரொக்கோலியையும் மஷ்ரூமையும் சேர்த்து 2-3 நிமிடத்துக்கு வதக்கவும். பிரொக்கோலி சாப்ட் ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- சோயா சாஸ் சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் 2-3 நிமிடத்துக்கு வேக வைக்கவும். அடுப்பை அணைக்கவும். ஆய்ஸ்டர் சாஸ் சேர்ப்பதனால் அடுப்பை அணைத்தவுடன் சேர்க்கவும்.
- பிரொக்கோலி - மஷ்ரூம் பொரியலை சூடாக பரிமாறவும்
|
Notes: |
சாதத்திற்கு <a href="/recipes/Lamb-Mutton-stew" >ஆட்டுக்கறி குழம்பு</a> அல்லது <a href="/recipes/Chicken-Curry">கோழிக்கறி குழம்பு</a> சேர்த்து இதையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். நூடில்ஸிற்கும் ஏற்றதாகும். |