அவியல்
recipe Image
 
அவியல் என்பது வேக வைத்த காய்கறிகளுடன் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
  • உருளைக்கிழங்கு -1 சிறியது
  • கேரட் -1 சிறியது
  • பீன்ஸ் - 50 கிராம் (விரும்பினால்)
  • கத்தரிக்காய் - 75 கிராம்
  • சொரக்காய் - 50 கிராம் (விரும்பினால்)
  • வாழைக்காய் - 1 (விரும்பினால்)
  • மாங்காய் - 2 1" துண்டு (விரும்பினால்)
  • தயிர் - 100 மில்லி
  • ஜீரகம் - 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - 2-3
  • கறிவேப்பிலை - சிறிது
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
Method:
  1. காய்கறிகளை சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஜீரகம், மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. காய்கறிகளுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.
  4. காய்கறிகள் வெந்தவுடன் தேங்காய் விழுதை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  5. இத்துடன் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. இந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  7. வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை காய்கறிக் கலவையில் போட்டு அலங்கரிக்கவும்.
  8. இப்போது அவியல் தயார்.
Notes:
காய்கறிகள் வேக எடுத்துக்கொள்ளும் நேரம் ஒவ்வொரு காய்கறிக்கும் வித்தியாசப்படுவதால், முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்இரண்டையும் வேகவிட்டு 7-8 நிமிடங்களுக்குப் பிறகு மற்றகாய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வேகவைக்கலாம்.