ஓவனில் வேகவைத்த காய்கறிகள்
recipe Image
 
காய்கறிகளை சாப்பிடுவதற்கு சத்தான மற்றும் சுவை மிகுந்த ஒரு முறை
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • வெள்ளரிக்காய்/ கோஜெட் - 1
  • கீரை - 75 கிராம்
  • குடைமிளகாய் - 1_2 (விருப்பப்பட்டால்)
  • சிவப்பு வெங்காயம் - 1_2 (விருப்பப்பட்டால்)
  • கத்தரிக்காய் - 4
  • தக்காளி - 1 (பெரியது)
  • மொட்சரெல்லா சீஸ் - 75 கிராம்
  • வெண்ணெய் - 5 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
Method:
  1. 200 டிகிரி செல்சியசுக்கு ஓவனை சூடு செய்யவும்.
  2. வெள்ளரிக்காயை நீளவாக்கில் ஸ்லைஸ் ஆக நறுக்கவும். குடைமிளகாய், கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை ஸ்லைஸ் ஆக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும்.
  3. கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. ஓவனில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  5. நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய் துண்டுகளை அதில் அடுக்கவும்.
  6. பின்னர் அதன்மீது குடைமிளகாய், கத்தரிக்காய், மற்றும் வெங்காயத்தை பாத்திரம் முழுவதும் பரவும்படி வைக்கவும்.
  7. பின்னர் அதே போல் கீரையை பரப்பவும்.
  8. அதன்மீது துருவிய சீஸை தூவி விடவும்.
  9. மேலே தக்காளி துண்டுகளை பரவலாக வைக்கவும்.
  10. உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவவும்.
  11. ஓவனில் சுமார் 20 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
Notes:
மொட்சரெல்லா சீஸ்க்கு பதிலாக செட்டர் சீஸ் பயன் படுத்தலாம்