பசலிக் கீரை ஆட்டுக்கறி மசாலா
recipe Image
 
பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • மட்டன் - 500 கிராம்
  • கீரை - 300 கிராம்
  • வெங்காயம் - 150 கிராம்
  • தக்காளி - 2
  • இஞ்சி - பூண்டு கலவை - 3 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1 ( தேவைப்பட்டால்)
  • இலவங்க பட்டை - 1" நீளம் கொண்டது
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி மற்றும் 2 மேஜைக்கரண்டி
  • தக்காளி விழுது - 1 தேக்கரண்டி ( தேவைப்பட்டால்)
  • உப்பு - சுவைக்காக
  • தண்ணீர் - தேவையான அளவு

மசாலா பொடிகள்:

  • மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
Method:
  1. கீரை இலைகளை நறுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கவும்.
  2. குக்கரில் எண்ணெயை ஊற்றிக் சூடாக்கவும்.
  3. இலவங்க பட்டை மற்றும் வெங்காயத்தை 4-5 நிமிடங்கள் வறுக்கவும். இஞ்சி - பூண்டு கலவை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும்.
  4. மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி 2-3 நிமிடங்கள் சமைக்கவும். குக்கரை மூடி மிதமான சூட்டில் சமைக்கவும். முதல் விசில் அடித்ததும், சூட்டைக் குறைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும். ஆவி சென்ற பின் மூடியை திறக்கவும்.
  5. கீரை இலைகள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
  6. இன்னும் சில நிமிடங்களுக்கு கறியை மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை காய்க்கவும். கறி குக்கரில் அடியில் ஒட்டிக் கொள்ளத் தொடங்கினால் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
Notes:
இந்த உணவு சப்பாத்தி/நாண் உடன் உண்ண சுவையாக இருக்கும். மாற்றத்திற்கு <a href="/recipes/Spinach-Chicken-curry">பசலிக் கீரை சிக்கன் மசாலா</a>, <a href="/recipes/Beetroot-Mutton-masala">பீட்ரூட் மட்டன் மசாலா</a> அல்லது <a href="/recipes/Potato-Mutton-masala">உருளைக்கிழங்கு மட்டன் மசாலா</a> ஆகியவற்றை செய்து பார்க்கலாம்.