இறால் தேங்காய் வறுவல்
| |
|
|
சுவையான இறால் சுக்கா வறுவல் எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்து விடலாம். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- இறால் - 250 கிராம்
- துறுவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- தக்காளி விழுது - 1 தேக்கரண்டி
- வெங்காயம் -1 சிறியது
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
|
Method: |
- கடாயை சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், துறுவிய தேங்காயை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். வறுத்த சீரகம்,வெங்காயம், தேங்காயை, சிறிது தண்ணீர் விட்டு அறைத்து கொள்ளவும்.
- கடாயை சூடாக்கி, அதில் எண்ணெய்யை ஊற்றவும்;
- பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும்.
- சீரகம், தேங்காய் விழுதையும் இறாலையும் சேர்த்து கிளறவும்.
- தண்ணீர் வற்றிய பின்பு இறக்கி வைக்கவும்.
- சுவையான இறால் தேங்காய் வறுவல் தயார்
|
|