எலுமிச்சை சாதம்
| |
 |
|
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
5 நிமிடங்கள்
|
Ingredients: |
- சாதம் - 3 கப்
- எலுமிச்சை சாறு - 60 மில்லி
- எண்ணெய் - 2.5 டேபில் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 7-8
|
Method: |
- வேக வைத்த சாதத்தை கிளறுவதற்கு வசதியாக ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்.
- சிறிய சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
- அதில் சிறிதளவு எண்ணெய் விடவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் மிளகாயை போடவும்.
- ஒரு நிமிடம் வறுபட்ட பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை கலக்கவும்.
- 2-3 நிமிடங்களுக்கு அல்லது எண்ணெய் விடும் வரை அதை கொதிக்க வைக்கவும்.
- பின்னர் இந்த கலவையை சாதத்தில் போட்டு நன்றாக கிளறவும்.
- எலுமிச்சை சாதம் சாப்பிட தயார்
|
Notes: |
சிவப்பு மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயும் பயன்படுத்தலாம். இதற்கு <a href="/recipes/Potato-fry">உருளைக் கிழங்கு பொரியல்</a> தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். |