வெண்டிக்காய் பொரியல்
| |
|
|
இந்திய மசாலா வகைகளுடன் வெண்டிக்காயை சேர்த்து தயாரிக்கப்படும் தென்னிந்திய வகை சத்தான உணவாகும். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- வெண்டிக்காய் - 300 கிராம்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 5-6
- காய்ந்த மிளகாய் - 1 (3-4 துண்டுகளாக உடைத்தது)
- ஜீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
- எண்ணெய் -3 டீஸ்பூன்
|
Method: |
- வெண்டிக்காய்களை கழுவி சுத்தமான துணியால் துடைத்து வைக்கவும்.
- ஒவ்வொரு வெண்டிக்காயையும் 7-8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயை சூடு செய்து எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும், அதில் உளுத்தம்பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.
- அதில் வெண்டிக்காய் துண்டுகள் மேலும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
- 5-10 நிமிடங்களுக்கு மூடாமல் வேக வைக்கவும்.
- அவ்வப்போது வெண்டிக்காய்களை கிளறி விடவும்.
- இப்போது கடாயை மூடி வைத்து மேலும் 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும். அப்போது தான் அடிபிடிக்காமல் இருக்கும்,
- வெண்டிக்காய்கள் வெந்ததும் அதனுடன் ஜீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து மேலும் 4-5 நிமிடங்களுக்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- அவ்வப்போது அடிவரை நன்கு கிளறி விடவும்
|
Notes: |
இது சாதம் மற்றும் <a href="/recipes/Lamb-stew">மட்டன் குழம்பு</a>, <a href="/recipes/Chicken-curry"> சிக்கன் குழம்பு</a>,<a href="/recipes/Rasam">ரசம்</a> அல்லது <a href="/recipes/sambar">சாம்பார்</a> ஆகிய வற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.
|