பீட்ரூட் மசாலா
| |
|
|
பீட்ரூட் மசாலா அசைவ உணவு தயாரிப்பு முறைப்படி தயாரிக்கப்படும் சுவையான உணவாகும்.
|
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- பீட்ரூட் - 250 கிராம்
- வெங்காயம் - 150 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
- ஜீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
- பட்டை - 1" நீளமுள்ள துண்டு
- கொத்தமல்லித் தழை - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
|
Method: |
- ஒரு இஞ்ச் நீளமுள்ள சதுரங்களாக பீட்ரூட்டை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழைகளை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்
- பிரஷர் குக்கர் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.
- பீட்ரூட்டை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும். அதனை சட்டியிலிருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே சட்டியில் பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
- தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் ஜீரகத் தூள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கிளறவும்.
- இதனுடன் பீட்ரூட் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- *** சுமார் 100 மிலி தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும். இரண்டவது விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆவி அடங்கியதும் மூடியைத் திறக்கவும்.
- சிறிது கெட்டியாகும் வரை மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
|
Notes: |
இது சாதம், சப்பாத்தி மற்றும் நாண் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள உகந்தது.
மாறுதலுக்கு <a href="/recipes/Beetroot-Mutton-masala">பீட்ரூட் மட்டன் மசாலா</a> செய்துப் பார்க்கவும். |