வாழைக்காய் பொரியல்
| |
|
|
வாழைக்காயை சுவையாக சமைக்கும் தென்னிந்திய முறை |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- 300 கிராம் அல்லது 3 வாழைக்காய்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் (தேவைப்பட்டால்)
- 2 டேபில் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- தண்ணீர் - தேவையான அளவு
|
Method: |
- வாழைக்காயை தோல் சீவி அரை சென்டிமீட்டர் தடிமனுக்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை அதில் போடவும்.
- நறுக்கிய வாழைக்காய் துண்டங்களையும் அரை ஸ்பூன் உப்பும் போட்டு 2 - 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பின்னர் 8 - 10 நிமிடங்களுக்கு சட்டியை மூடி வைக்கவும்.
- சட்டியின் அடியில் வாழைக்காய் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் வகையில் ஒரிரு முறை சட்டியை திறந்து கிளறி விடவும்.
- வாழைக்காய் துண்டுகள் வெந்தவுடன் அதில் சீரகத் தூளை போட்டு மொறுப் மொறுப்பாகும் வரை 5 - 6 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும்
|
Notes: |
இது சாதம், <a href="/recipes/Rasam">Rasam</a>, <a href="/recipes/Mung-Dal-curry">Mung Dal curry</a> அல்லது <a href="/recipes/Sambar">சாம்பாருடன்</a> சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
மாற்றத்திற்கு <a href="/recipes/Plantain-StirFry-02">வாழைக்காய் பொடிமாசை </a> முயற்சிக்கவும்.
|