மீன் குழம்பு
recipe Image

புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
• புளி - சிறிய எலுமிச்சை அளவு
• மீன் துண்டுகள்/ சிறிய முழு மீன் - 400 கிராம்
• சிறிய வெங்காயம் - 14-15 அல்லது 100 கிராம்
• தக்காளி - 1/2
• பூண்டு - 3 பல்லு
• பச்சை மிளகாய் - 2
• கறிவேப்பிலை- 1 கொத்து
• வெந்தயம் - 1 டீஸ்பூன்
• தேங்காய் பால் - 150 மில்லி
• சீனி - 1/2 டீஸ்பூன்
• எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
• வெந்நீர் - 20 மில்லி லிட்டர்
• தண்ணீர் - தேவைக்கேற்ப
• உப்பு - தேவைக்கேற்ப

மசாலா பொடிகள்

• மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
• மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
• மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
• மல்லித் தூள் - 3 டீஸ்பூன் நிறைய
Method:
1. வெந்நீரில் சில நிமிடங்கள் புளியை உளறவைக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த புளியைப் நன்றாக பிழிந்து, புளிக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். என்ணெய் நன்கு சூடான பின், வெந்தயத்தையும், கறிவேப்பிலையையும் வறுக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. மசாலா பொடிகளின் கீழ் உள்ள எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.
4. புளிக் கரைசல், சீனி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.
5. தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி பூண்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
6. இவற்றுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.
7. மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக குழம்பில் சேர்க்கவும்.
8. கடாயை மூடி, மிதமான சூட்டில் 4-5 நிமிடம் வரை வேகவைக்கவும்.
9. சமைத்த பின் பரிமாறவும்
Notes:
இதை சாதத்தில் ஊற்றி  பொரித்த மீன், பருப்பு சொரக்காய் , முட்டைகோஸ் பொரியல் ஆகியவற்றை தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். மாறுதலுக்கு முட்டை ஆம்லெட் புளி குழம்பு  or காய்கறி புளி குழம்பு செய்து பார்க்கவும். புளி கிடைக்கவில்லை என்றால் தக்காளி கூழ் உபயோகிக்கலாம் .