சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி
recipe Image
 
சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி மாலையில் சாப்பிடக்கூடிய எளிமையான டிஷ் ஆகும், அதை சுவை குன்றாமல் எளிதாக சமைக்கலாம்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • 225 கிராம் மக்கரோனி
  • 150 கிராம் எலும்பில்லாத கோழி துண்டுகள்
  • 2 டேபில் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய் பாஸ்தா சமைப்பதற்கு
  • 50g வெண்ணெய் (butter)
  • 2 டேபில் ஸ்பூன் மைதா மாவு
  • 1/2 லிட்டர் or 2 ½ cup பால்
  • 1/2 வெங்காயம் சிறியது
  • 100கிராம் சோழ முத்துக்கள் (sweetcorn)
  • 1 டேபில் ஸ்பூன் நறுக்கிய பார்ஸ்லி இலை
  • 50கிராம் சீஸ் (cheddar cheese)
  • 1 தக்காளி ஸ்லைஸ் ஆக வெட்டியது
  • உப்பு - சுவைக்கேற்ப
  • மிளகு - சுவைக்கேற்ப
Method:
  1. கோழியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
  2. சீஸை துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
  3. ஒரு பெரிய கடாயில் அல்லது இருப்புச்சட்டியில் பாதி எண்ணெயை காய வையுங்கள்.
  4. வெட்டி எடுத்த கோழித்துண்டுகளை 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  5. அடுப்பில் இருந்து நீக்கி அதை ஒதுக்கி வைக்கவும்.
  6. வைட் சாஸ் ( white sauce) செய்வதற்கு, அதே கடாயில் எண்ணையுடன் வெண்ணையை உருக்கி வெங்காயத்தை சேருங்கள்; பிறகு அது மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.
  7. மாவை கட்டி ஆகாதவாறு சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு நிமிடத்திற்கு மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.
  8. அடுப்பில் இருந்து சட்டியை நீக்கி ,பாலை நன்றாக கலக்கிக்கொண்டே சேர்க்கவும்.
  9. சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்; சாறு நல்ல அடர்த்தியாக மாறும் வரை இளக்கிக்கொண்டே இருக்கவும்.
  10. முட்டை அடிக்கறதை பயன்படுத்தி சாறில் கட்டிகள் உண்டாவதை தடுக்கவும்.
  11. கோழி துண்டுகள்,சோழ முத்துக்கள், உப்பு, நசுக்கிய மிளகு மற்றும் நறுக்கி வைத்த பார்ஸ்லி இலைஆகியவற்றை சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு இலேசான சூட்டில் மேலும் கொதிக்க வைக்கவும்.
  12. ஒரு பெரிய சட்டியில் தண்ணீரை எடுத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது, பாஸ்தாவை சேர்த்து 12-15 நிமிடங்கள் அல்லது பாஸ்தா வேகும்வரை சமைக்கவும்.
  13. பாஸ்தாவை சமைத்த பின், தண்னீரை முழுமையாக வடிகட்டி, வைட் சாஸ் உள்ள சட்டியில் சேர்க்கவும்.
  14. பாஸ்தா மற்றும் வைட் சாஸை நன்றாக கலக்கவும்.
  15. சீஸை தூவிய பின் மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.
  16. தக்காளித் துண்டுகளை வைத்து அழகுபடுத்தவும்.
  17. சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.