இறால் பிரியாணி
recipe Image
 
எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
Cooking Time : 45-60 நிமிடங்கள்

Ingredients:
  • இறால் -1 கி
  • பாஸ்மதி அரிசி - 1 கி
  • எண்ணெய் - 250 மில்லி (125மில்லி அரிசிக்கு மற்றும் 125மில்லி இறால் மசாலாக்கு )
  • பட்டை - 2 துண்டுகள்
  • ஏலக்காய் - 2
  • கிராம்பு - 3-4
  • வெங்காயம் - 3 பெரியது (1 அரிசியுடன் மற்றும் 2 இறால் மசாலாவுடன் )
  • தக்காளி - 4 நடுத்தர அளவு
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி பூண்டு விழுது - 3 டேபில் ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 3 டேபில் ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபில் ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம் பொடி - 1/2 டீஸ்பூன்

இறால் வறுவலுக்கு தேவையான பொருட்கள்

  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபில் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபில் ஸ்பூன்
Method:
  1. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்.

சாதம் செய்யும் முறை

  1. அரிசியை கழுவி ஒரு பாத்திரத்தில் 10 நிமிடம் வரை ஊறவைக்கவும். பின்பு அதை வடித்து கொள்ளவும்.
  2. கடாயை மிதமான சூட்டில் வைக்கவும்.
  3. அதில் 125 மில்லி எண்ணெய் ஊற்றவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  4. அதில் 1 நறுக்கிய வெங்காயம், பாதி நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து 3-4 நிமிடம் வரை வதக்கவும்.
  5. அரிசி சேர்த்து 4-5 நிமிடம் வரை வதக்கவும்.
  6. 1 லிட்டர் 400 மில்லி தண்ணீர், உப்பு மற்றும் நெய் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன், சட்டியை மூடி 15-20 நிமிடம் அல்லது சாதம் வேகும்வரை மிதமான சூட்டில் வைக்கவும்.

இறால் மசாலா செய்யும் முறை

  1. இறால் வறுவலுக்கு தேவையான பொருட்களை இறாலுடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இறால் கலவையை சேர்த்து 1-2 நிமிடம் வேக வைத்து, இறாலை சட்டியில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
  3. இதில் தேவையான அளவு உப்பு, மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  4. பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மீதமுள்ள நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  5. மசாலா பொடிகள் சேர்த்து கிளறவும்.
  6. இதில் வறுத்து வைத்த இறாலையும் எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.

பிரியாணி செய்யும் முறை

  1. வேக வைத்த சாதத்தை இறால் மசாலா பாத்திரத்தில் கொட்டி, நன்று கிளறி, சட்டியை மூடி, 6-8 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  2. சுவையான இறால் பிரியாணி தயார்!