இறால் வறுவல்
recipe Image
 
இறால் வறுவல் எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • பெரிய இறால் - 500 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - 5-6 டேபில் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
Method:
  1. கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. இறால், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மிளகு தூள், தேவையான உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை கலவையாக கலந்து வைத்து கொள்ளவும்.
  3. கடாயை மிதமான சூட்டில் சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் இறால் கலவையை 2 முதல் 3 நிமிடம் வரை வேக வைக்கவும். அவற்றை கடாயில் இருந்து இறக்கி வைக்கவும்.
  4. பின்பு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.
  5. அதில் இறாலை ஒவ்வொன்றாக போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
  6. இறாலை திருப்பி போட்டு அடுத்த பக்கத்தையும் வறுக்கவும்.
  7. பின்னர் எண்ணெயில் இருந்து இறால்களை எடுத்து, கொத்தமல்லி இலை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
  8. இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்
Notes:
<a href="/recipes/Lamb-coconut-fry">மட்டன் பொடிக்கறி </a>/<a href="/recipes/Coriander-Chicken-fry">கொத்தமல்லி கோழி வறுவல் </a> செய்து பாருங்கள்.