உருளைக் கிழங்கு பொடிமாஸ்
recipe Image
 
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • உருளைக் கிழங்கு - 500 கிராம் அல்லது 3 நடுத்தர அளவு
  • எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன் மற்றும் ஒரு டீஸ்பூன் (வறுக்க)
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 சிறியது
  • தக்காளி - 1
  • கொத்தமல்லி நறுக்கியது - 1/2 டீஸ்பூன்
  • உப்பு (சுவைக்கேற்ப)

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
Method:
  1. உருளை கிழங்கை கழுவி விட்டு பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் கொத்துமல்லியை நறுக்கி கொள்ளவும்.
  3. பிரஷர் குக்கரில் தண்ணீர், உப்பு, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் உருளை கிழங்கை 3-4 விசிலுக்கு வேக வைக்கவும்.
  4. ஆறிய பின்னர் உருளைக்கிழங்கு தோலை அகற்றி வெட்டிக் கொள்ளவும்.
  5. சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
  7. நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு 3 - 4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  8. நறுக்கிய உருளைக்கிழங்கு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு போட்டு
  9. 2 - 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  10. 1/2 கப் தண்ணீர் விட்டு 5 முதல் 6 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  11. உருளைக் கிழங்கு வெந்த பின்னர் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மொறு, மொறுப்பாகும் வகையில் 7 - 8 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  12. சட்டியின் அடியில் உருளை கிழங்கு தீயாமல் இருக்கும் வகையில் சில முறை நன்றாக கிளறவும்.
  13. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  14. அதன் மீது கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்.
Notes:
Suitable for Rice and <a href="/recipes/Rasam">ரசம்</a>/<a href="/recipes/Sambar"> சாம்பார் </a>. Please try <a href="/recipes/Potato-fry">உருளைக் கிழங்கு பொரியல்</a> as an alternative.