பருப்பு துவையல்
recipe Image

பல்வேறு குழம்புக்கு, கஞ்சி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பருப்பு துவையல் சுவையாக இருக்கும்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 5 நிமிடங்கள்

Ingredients:
• பாசிப்பருப்பு - 4 தேக்கரண்டி
• காய்ந்த மிளகாய் - 3
• தேங்காய் துருவல் - 1 டேபில் ஸ்பூன்
• வெங்காயம் - 1/2 சிறியது அல்லது சின்ன வெங்காயம் 5-6
• உப்பு (சுவைக்கேற்ப)
Method:
1. சட்டி ஒன்றை சூடுபடுத்தவும்.
2. அதில் பாசிப்பருப்பு மற்றும் மிளகாயை போட்டு 3 - 4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
3. பின்னர் மிளகாயை எடுத்துவிட்டு பருப்பை மட்டும் தண்ணியில் 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
4. வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.
5. தேங்காய் துருவல், வெங்காயம், வறுத்த பாசிப்பருப்பு, மிளகாய் மற்றும் 2 - 3 டேபில் ஸ்பூன் தண்ணீருடன் அதை கலந்து நன்றாக அரைக்கவும்
Notes:
இதனை கஞ்சி சோறு , புளி சாதம்,பூண்டு குழம்பு, ரசம் அல்லது நோம்பு கஞ்சியுடன் பரிமாறவும்.