வெண்டிக்காய் பக்கோடா
| |
|
|
வெண்டிக்காய் பக்கோடா மதிய உணவுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.
|
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- வெண்டிக்காய் - 250 கிராம்
- கடலை மாவு - 100 கிராம்
- அரிசி மாவு - 50 கிராம்
- மிளகாய் தூள் - 2 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
- எண்ணெய் - 200 மிலி (பொரிப்பதற்கு)
- தண்ணீர் - தேவையான அளவு
|
Method: |
- வெண்டிக்காய்களின் தலைப்பகுதியையும், வால்பகுதியையும் நறுக்கிக் கொள்ளவும். நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
- கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், 2 டேபில் ஸ்பூன் எண்ணெய், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- வெண்டிக்காய்களை மாவுக் கலவையுடன் கலந்து 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
- மாவு மிகவும் உதிரியாக இருந்தால் 1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
- சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
|