பாவக்காய் பொரியல்
recipe Image

பாவக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காயாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
• பாவக்காய் - 3
• மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன்
• காய்ந்த மிளகாய் - 1 1/ 2
• துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
• சீரக பொடி - 1/2 டீஸ்பூன் (விரும்பினால் )
• கறிவேப்பிலை - சிறிது
• நறுக்கிய வெங்காயம் - 1 டேபில் ஸ்பூன்
• சர்க்கரை - 2 டேபில் ஸ்பூன்
• தயிர் - 50 கிராம் அல்லது 3 டேபில் ஸ்பூன்
• தக்காளி ப்யூரி(Puree) - 1 டீஸ்பூன்
• எண்ணெய் - 4 டீஸ்பூன்
• கடுகு - 1/4 டீஸ்பூன்
• உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
Method:
1. பாவக்காயை குறுக்குவாட்டில் நறுக்கி, அதில் உள்ள விதைகளை அகற்றிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. பாவக்காயின் கசப்பை போக்கும் வகையில் அதை தயிரில் போட்டு 30 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்,
3. சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
4. எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை தாளிக்கவும்.
5. கடுகு வெடித்தப் பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
6. நறுக்கப்பட்ட பாவக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், தக்காளி ப்யூரி, சர்க்கரை மற்றும் சீரக பொடியை அதில் போட்டு 2 நிமிடங்களுக்கு கிளறவும்.
7. சட்டியை மூடி வைத்து 10-12 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
8. பின்னர் சட்டியை திறந்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாகும் வகையில் 4 - 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
9. பின்னர் அதில் தேங்காய் துருவலை தூவவும்
Notes:
சாம்பார், பருப்பு ஆனம் , ரசம், பருப்பு, முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட் புளி குழம்பு அல்லது பூண்டு குழம்பு/a> கலந்த சாதத்திற்கு பாவக்காய் கறி தொட்டுக் கொள்ள ஏற்றது.