கோழி குழம்பு
recipe Image
 
கோழி குழம்பு கோழிக்கறி பிரியர்களுக்கான விருந்து. இந்த முறையில் சமைப்பதால், கோழி துண்டுகள் மிருதுவாகவும் சுவையானதாகவும் இருக்கும்
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • சிக்கன் - 500 கிராம்
  • வெங்காயம் - 200 கிராம் அல்லது 1 பெரியது
  • தக்காளி - 150 கிராம் அல்லது 2
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • பட்டை - 1" துண்டு
  • கிராம்பு - 2
  • ரெடிமேட் தேங்கய்ப்பால் - 3 மேசைக்கரண்டி அல்லது 150 மில்லி வீட்டில் செய்த தேங்கய்ப்பால்
  • கொத்தமல்லி இலை - 2 கொத்து
  • எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
Method:
  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கர் சட்டியில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.
  3. பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும் .
  4. நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறி 4-5 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.
  5. இந்தக் கலவையுடன், சிக்கன் துண்டுகள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, சட்டியை மூடி, விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
  6. கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும்.