தேங்காய் சட்னி
recipe Image
 
இட்லி, வடை, பொங்கல் மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 5 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • தேங்காய்த் துருவல் - 5 டேபில் ஸ்பூன்
  • பொட்டு கடலை - 1 1/2 டேபில் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சித் துண்டுகள் - 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் வெட்டியது - 1 டேபில் ஸ்பூன் (விரும்பினால் )
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் (விரும்பினால் )
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
Method:
  1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்; வெங்காயம், மிளகாய் மற்றும் இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.
  2. தேங்காய் மற்றும் பொட்டுகடலையை மிக்ஸி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் குறைந்த வேகத்தில் அரை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  3. 4-5 டேபில் ஸ்பூன் தண்ணீர், இஞ்சி, உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
  4. குறைந்த வேகத்தில் 1-2 நிமிடங்களுக்கு மீண்டும் அரைக்கவும்.
  5. பச்சை மிளகாயை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடத்திற்கு அரைக்கவும்.
  6. தேவைப்பட்டால் தண்ணீர் விடவும்.
  7. சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் எண்ணெய் விடவும்.
  8. கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
  9. சட்னியில் அதை சேர்க்கவும்
Notes:
குளிர்காலமாக இருந்தால் அரைப்பதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும்.