வட்லாப்பம்
| |
|
|
வட்லாப்பம் விசேஷ நாட்களில் செய்யப்படும் இந்திய உணவுப் பொருளாகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- 300 மில்லி தேங்காய்ப் பால்
- 200 மில்லி பால்
- 6 முட்டை
- 175 கிராம் சர்க்கரை/வெல்லம்
- 25 கிராம் அல்லது 19-20 முந்திரி
- 7-8 ஏலக்காய்
|
Method: |
- முட்டையை நன்றாக அடிக்கவும்.
- தேங்காய்ப்பால், பால், சர்க்கரை மற்றும் பாலை ஒன்றாக சேர்ந்து நன்றாக கலக்கவும்.
- ஏலக்காய் மற்றும் முந்திரியை 2 - 3 ஸ்பூன் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஏலக்காய் மற்றும் முந்திரி விழுதை வடிகட்டி, சாற்றை மட்டும் வைத்துக் கொண்டு கசடை ஒதுக்கிவிடவும்.
- முட்டை மற்றும் தேங்காய்ப்பால் கலவையில் இந்த சாற்றைக் கலக்கவும்.
- 16-18 சென்டிமீட்டர் விட்டமும் 6-8 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட பாத்திரத்தில் இதை போடவும் .
- வேறொரு பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி , அதில் இந்தப் பாத்திரத்தை வைத்து ஆவியில் சுமார் 45 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- வட்லாப்பத்தை குறைந்தது 1 மணி நேரமாவது ஐஸ் பெட்டியில் வைத்து சில்லுன்னு பரிமாறவும்.
|
Notes: |
தேங்காய்ப் பாலுக்கு பதிலாக மாட்டு பாலை உபயோகித்தால் வேறு சுவையாக இருக்கும் |