தயிர் சாதம்
recipe Image
 
சாதத்தை சுவையான பேக்கிங் உணவாக்கும் முறை.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 5 நிமிடங்கள்

Ingredients:
  • சாதம் - 3 கப்
  • தயிர் - 300 மிலி
  • எண்ணெய் - 1 டேபில் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 7-8
  • பச்சை மிளகாய் - 1
  • சீவிய இஞ்சி துண்டுகள் - 1/2 டீஸ்பூன்
  • வெள்ளரிக்காய் - சிறியது 1
  • வெண்ணை அல்லது நெய் - 1 டீஸ்பூன்(தேவைப்பட்டால்)
Method:
  1. வெள்ளறிக்காயை சிறு சிறு வட்டங்களாகவும் பின்னர் அவற்றைப் பாதியாகவும் நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் மிளகாயை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. சாதத்தில் 100 மிலி தண்ணீரை விட்டு மைக்ரோவேவில் வைத்து சூடுபடுத்தி குழைவாக்கிக் கொள்ளவும்.
  3. சாதத்தை பிசைந்து நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
  4. இந்த சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொண்டால் பிசைவதற்கு சுலபமாக இருக்கும்.
  5. சிறிய சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி, கொஞ்சம் எண்ணெய் விடவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  7. கடுகு வெடித்தவுடன் அதில் மிளகாய் மற்றம் இஞ்சியைப் போட்டு கிளறவும்.
  8. பின்னர் அடுப்பை அணைத்து, தயிரை அதில் போட்டு கலக்கவும்.
  9. இந்தக் கலவையை சாதத்தின் மீது போட்டு, பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  10. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
Notes:
வெள்ளரிக்காய்க்கு பதிலாக காரெட்டையோ , திராட்சை பழத்தையோ, சின்ன வெங்காயத்தையோ போடலாம்.