முருங்கக்காய் இறால் கூட்டு
recipe Image

முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
• முருங்கைக்காய் - 3
• வெங்காயம் - 1 சிறியது
• தக்காளி - 1
• தக்காளி பூரி (puree) - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
• மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
• மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
• இறால் - 50 கிராம்/முட்டை 1
• பச்சை மிளகாய் - 1 (விரும்பினால் )
• எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
• பட்டை - 1" நீட்டமான துண்டு
• தேங்காய் பால் - 2 டேபில் ஸ்பூன்
• கறிவேப்பிலை - 1 கொத்து
• உப்பு - சுவைகேற்ப
Method:
1. தக்காளியையும் வெங்காயத்தையும் நறுக்கவும். முருங்கக்காயை இரண்டு அங்குளமாக நறுக்கிக்கொள்ளவும்.
2. கடாயை சூடுபடுத்தி எண்ணெயை ஊற்றவும்.
3. கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாயை சேர்த்து 1-2 நிமிடம் வரை கிளறவும்.
4. 5-6 இறால் சேர்த்து கிளறவும்.
5. தக்காளி பூரி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
6. உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
7. குறைந்த சூட்டில் காய் வேகும்வரை மூடி சமைக்கவும். சமைக்கும் போது ஓரிரு முறை மூடியை திறந்து போதுமான தண்ணீர் உள்ளதா என்று சரிபார்க்கவும்.
8. மீதமுள்ள இறால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்கவும்
Notes:
இதை சாதத்துடன் சாம்பார் ,ரசம், பருப்பு ஆனம் , பருப்பு, முட்டை புளிக்குழம்பு, முட்டை ஆம்பலெட் புளிக்குழம்புமற்றும்  பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும் . மாற்றத்துக்கு கோவைக்காவை பொரியல்,  சொரக்காய் கூட்டு  அல்லதுபீன்ஸ் இறால் கூட்டு செய்து பார்க்கலாம்.