பூண்டு குழம்பு
| |
|
|
இதயத்துக்கு நல்லதான பூண்டை இப்படியும் சமைத்து சாப்பிடலாம். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- சின்ன வெங்காயம் - 18-20 அல்லது 1 வெங்காயம் சிறியது
- தக்காளி - 1
- பூண்டு - 8-10 பெரிய பற்கள்
- நசுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் (விரும்பினால் )
- எண்ணெய் - 5 டேபில் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 4
- புளி - 4 சென்டிமீட்டர் அளவுக்கு சிறிய உருண்டை
- வெதுவெதுப்பான தண்ணீர் - 250 மி.லி
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
|
Method: |
- புளியை நன்றாக கழுவி பாதி அளவு வெதுவெதுப்பான தண்ணீரில் 5-6 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- தேவையான பூண்டை நசுக்கிக் கொண்டு மீதியை அப்படியே வைத்துக் கொள்ளவும்
- தண்ணீரில் போடப்பட்ட புளியை நன்றாக பிழிந்து புளி சாறை வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் சட்டியை வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
- கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
- நசுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும்.
- அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூளை அதில் போட்டு வதக்கவும்.
- அதில் முழு பூண்டைப் போட்டு வதக்கவும்.
- புளி சாறையும் சிறிது தண்ணீரையும் சட்டியில் ஊற்றவும்.
- சட்டியை மூடிவைத்து பூண்டு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் சிறிது சேர்த்து கொதிக்க வைக்கவும்
|
Notes: |
இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாகும். ஒரு மாறுதலுக்காக <a href="/recipes/Tamarind-egg-omlette-curry">ஆம்லெட் புளிக் குழம்பு</a>, <a href="/recipes/Tamarind-egg-curry">முட்டை புளிக் குழம்பு</a> அல்லது <a href="/recipes/Tamarind-curry-vegetables">காய்கறி புளிக் குழம்பு</a> சுவைத்துப் பார்க்கவும்.
|