ஜிஞ்ஜர் சிக்கன்
recipe Image
 
சப்பாத்தி/ நாண் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :2-3 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
  • எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (சிறிய துண்டுகள்)
  • வெங்காயம் - 300 கிராம் அல்லது 2 நடுத்தர அளவு
  • இஞ்சி - 1" அகலமான 1" நீட்டமான துண்டு
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • எலும்பிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
  • சிக்கன் ஸ்டாக் - 100 மி.லி
  • சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
  • நெய் - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
Method:
  1. உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, பாதி எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் சிக்கனை சேர்த்து குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை நீட்டமான மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  3. இஞ்சி துண்டுகளை மீதமிருக்கும் எலுமிச்சை சாறில் ஊறவைக்கவும்.
  4. கடாயை அடுப்பில் வைத்து , 2 மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் , அதில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பின்பு அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  6. மீதம் உள்ள எண்ணெயை கடாயில் ஊற்றவும்.
  7. சில இஞ்சி துண்டுகளை அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்துவிட்டு, மற்ற இஞ்சி துண்டுகளை கடாயில் சேர்த்து வறுக்கவும் .
  8. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை கடாயில் போட்டு, பொன்நிறம் வரும்வரை வறுக்கவும்.
  9. அரைத்து வைத்த கலவை, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து, சில நிமிடங்களுக்கு கிளறவும் .
  10. சிக்கன் ஸ்டாக், சர்க்கரை மற்றும் இஞ்சி துண்டுகள் ஊறிய எலும்பிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும். சில நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
  11. மூடியை திறந்து, நெய் ஊற்றி எண்ணெய் விடும் வரை கொதிக்க வைக்கவும்.
  12. இஞ்சி துண்டுகளை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்
Notes:
மாற்றத்திற்கு <a href="/recipes/MethiChicken-curry"> வெந்தய சிக்கன்</a>- ஐ முயற்சிக்கவும்.