பக்கோடா
recipe Image
 
மாலை நேரங்களில் குழந்தைகள் பசியாக இருக்கும்போது இதை செய்து கொடுக்கலாம்
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • கடலை மாவு - 200 கிராம்அல்லது 2 கப்
  • அரிசி மாவு - 50 கிராம் அல்லது 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 2
  • சீவின இஞ்சி - 1/2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 18-20 அல்லது 1 வெங்காயம் நடுத்தர அளவு
  • சோடா மாவு - 1 சிட்டிகை
  • பெருங்காய தூள் - 2 சிட்டிகை
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 3 தேக்கரண்டி அதிக காரத்திற்கு 3 tsp for extra spicy
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • கடலை - 15-20 (விரும்பினால் )
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி அல்லது 3 மேசைக்கரண்டி மற்றும் நெய் 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 250 மி.லி (வறுக்க)
  • தண்ணீர் - சிறிது
Method:
  1. தோலை உரித்து வெங்காயத்தை நறுக்கவும். கறிவேப்பிலையை பிய்த்துக் கொள்ளவும். கடலை உபயோகித்தால், இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  2. இரண்டு மாவையும் சலித்துக் கொள்ளவும்.
  3. எண்ணெயை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களை வைத்து கலவை செய்யவும்.
  4. 4 மேசைக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்தவும். நன்கு கலக்கவும் .
  5. 2 தேக்கரண்டி பக்கோடா கலவையை எடுத்து தனித்தனியாக உருண்டையாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  6. கலவை முடியம் வரை, இதே போல் பக்கோடா கலவையை எடுத்து எண்ணெயில் போட்டு வறுக்கவும்.