காய்கறி குருமா
recipe Image
 
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
Preparation Time : 10-20 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு அல்லது 150 கிராம்
  • கேரட் - 2 சிறியது அல்லது 100 கிராம்
  • பீட்ரூட் - 1 நடுத்தர அளவு அல்லது 100 கிராம்
  • பீன்ஸ் - 50 கிராம்
  • வெங்காயம் - 1 பெரியது
  • தக்காளி - 4
  • பச்சை மிளகாய் - 1 (விரும்பினால் )
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • பட்டை - ஒரு அங்குலம்
  • தயிர் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி (விரும்பினால் )
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு

மசாலாத் தூள்கள்

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
  • தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

அரைக்கத் தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
  • சோம்பு - 1 தேக்கரண்டி (விரும்பினால் )
Method:
  1. வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  2. காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து 2-3 செ.மீ துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு மிதமான வேகத்தில் சூடு படுத்தவும்.
  4. காய்கறிகளை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. காய்கறிகளை நீக்கி தனியாக வைக்கவும்.
  6. மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  7. நறுக்கிய காய்கறி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
  8. 1 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து 15-2௦ நிமிடங்கள் அல்லது காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.
  9. அதற்குள், துருவிய தேங்காய், சோம்பு, காய்ந்த சிகப்பு மிளகாயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைக்கவும்.
  10. இதை சமைத்த காய்கறியுடன் சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  11. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  12. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
இந்த காய்கறி குருமா சாதம்/சப்பாத்தி/நாண் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். ஒரு மாற்றத்திற்கு <a href="/recipes/Paneer-butter-masala">பன்னீர் பட்டர் மசாலா</a> அல்லது <a href="/recipes/Aloo-Gobi">ஆலு கோபி</a> முயற்சிக்கலாம்.