நவரத்தின பக்கோடா
| |
|
|
நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம். |
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- வெங்காயம் - 1 நடுத்தர அளவு
- சீவின இஞ்சி - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3 (தேவைப்பட்டால்)
- உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு
- கேரட் - 1 சிறியது
- கத்தரிக்காய் - 3
- கீரை - 50 கிராம்
- அரிசி மாவு - 70 கிராம் அல்லது 1/2 கப்
- கடலை மாவு 210 கிராம் அல்லது 2 கப்
- சோடா மாவு - 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி
- தயிர் - 3 மேசைக்கரண்டி
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்)
- எண்ணெய் - 250 மி.லி (வறுப்பதற்கு)
- தண்ணீர் - தேவையான அளவு
|
Method: |
- காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- இரண்டு மாவையும் சலித்துக் கொள்ளவும்.
- காய்கறி, அரிசி மாவு, கடலை மாவு, சோடா மாவு, சர்க்கரை, தயிர், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
- 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
- கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விடவும்.
- சிறிய அளவில் அதை தட்டை போல் தட்டி எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரிக்கவும்.
|
Notes: |
கெட்சப் அல்லது <a href="/recipes/raitha">ரைத்தா</a>-வுடன் இது சுவையாக இருக்கும்.
ஒரு கப் என்பது 250மி.லி தண்ணீர் பிடிக்கும் அளவு கொண்டது |