வெங்காய பக்கோடா
recipe Image
 
நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • கடலை மாவு - 75g
  • அரிசி மாவு - 25g
  • பச்சைமிளகாய் - 2 (தேவைப்பட்டால்)
  • வெங்காயம் - 150 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு
  • தயிர் - 1/2 மேசைக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி நுணுக்கியது
  • சோடா மாவு - 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 200 மி.லி (வறுப்பதற்கு)
  • உப்பு - சுவைக்கேற்ப
Method:
  1. வெங்காயத்தை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையும் கொத்தமல்லி தழையையும்
  2. கழுவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  3. இரண்டு மாவையும் சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.
  4. சீரகத்தை ஒன்னு இரண்டாக நுணுக்கி கொள்ளவும்.
  5. இரு மாவுகள், தயிர், நெய், உப்பு, சோடா மாவு, நுணுக்கிய சீரகம், மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து கலக்கவும். மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும்.
  6. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  7. கடாயை அடுப்பில் வைத்து , எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
  8. 2 மேசைக்கரண்டி அளவுக்கு மாவை எடுத்து கொதிக்கும் எண்ணெய்யில் உதிர்த்து வறுக்கவும்.
  9. கலவை முடியம் வரை வறுக்கவும்
Notes:
கெட்சப் அல்லது <a href="/recipes/raitha">ரைத்தா</a>-வுடன் இது சுவையாக இருக்கும்.