கத்தரிக்காய் சட்னி
recipe Image
 
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • கத்திரிக்காய் - 4
  • உருளைக்கிழங்கு - சிறியது 1 அல்லது 100 கிராம்
  • வெங்காயம் - சிறியது 1 அல்லது 100 கிராம்
  • தக்காளி - 1
  • புளி - 1 கோலிஉருண்டை அளவு
  • உடைத்த பாசி பருப்பு - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • சாம்பார் தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - தாளிப்பதற்கு
  • உப்பு - சுவைக்கு
Method:
  1. கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  2. சுடு நீரில் புளியை ஊறவைக்கவும். புளிக்கூழினைக் கசக்கிப் பிழிந்து புளிச்சாறினை எடுத்து, வடிகட்டி ஒரு பக்கமாக வைக்கவும்.
  3. ஒரு பிரஷர் குக்கரில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, நறுக்கப்பட்ட கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பாசி பருப்பு அனைத்தையும் சேர்க்கவும்.
  4. 2-3 விசில் வரும்வரை அவற்றை சமைக்கவும். நீங்கள் அதைத் திறக்க முன், குளிர்விக்கவும்.
  5. ஒரு கடாயினை சூடாக்கி, எண்ணெயை சேர்க்கவும்.
  6. கடுகு மற்றும் கருவேப்பிலை கொண்டு தாளிக்கவும்.
  7. மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். நன்கு கிளறி, ஒரு மிதமான வெப்பத்தில் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
  8. புளி சாறு மற்றும் சாம்பார் தூள் சேர்க்கவும். சுமார் 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  9. இப்போது வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து, அதை மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  10. கத்திரிக்காய் சட்னி சாப்பிடுவதற்கு தயாராக உள்ளது.