பட்டர் சிக்கன்
recipe Image
 
பட்டர் சிக்கன் சப்பாத்தி, நாண் அல்லது எந்தவகை கோதுமை ரொட்டிக்கும் ருசியாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • எலும்பற்ற கோழிக்கறி - 750 கிராம் - சிறு துண்டுகளாக வெட்டியது
  • இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

மசாலா பொடிகள்:

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1& 1/2 தேக்கரண்டி அல்லது 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி

பட்டர் சாறு செய்யத் தேவையானப் பொருட்கள்:

  • வெண்ணெய் - 100 கிராம்
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 300 கிராம் அல்லது 2 நடுத்தர அளவு
  • பச்சை மிளகாய் - 1 (விருப்பமானால்)
  • தக்காளி - 450 கிராம் அல்லது 6
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கிரீம் – 3 மேசைக்கரண்டி (விருப்பமானால்)
  • அரைத்த முந்திரி - 50 கிராம்
  • உப்பு - சுவைக்கு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
Method:
  1. இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் கோழிக்கறியை ஊறவைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை வெட்டவும்.
  3. அடுப்பில், மிதமான வெப்பத்தில், ஓர் கடாயை சூடாக்கி, எண்ணெயைச் சேர்க்கவும்.
  4. எண்ணெய் போதுமான வெப்பமடைந்ததும், வெட்டிய வெங்காயம் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்கள் வதக்கவும், கடாயிலிருந்து, ஒரு துளையிட்ட வறுக்கும் கரண்டியால் அவற்றை நீக்கி, குளிர வைக்கவும்.
  5. கடாயில் வெண்ணெய், தக்காளி, மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து சுமார் 3-4 நிமிடங்கள் மூடாமல் சமைக்கவும். அடுப்பினை அணைக்கவும். கடாயிலிருந்து, ஒரு துளையிட்ட வறுக்கும் கரண்டியால் அவற்றை நீக்கி, போதுமான அளவு குளிர்ந்ததும், அவற்றை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அரைக்கவும்.
  6. அதே கடாயில் ஊறவைத்தக் கோழித் துண்டுகள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, அவை லேசான பழுப்பு நிறமாகும் வரை, சுமார் 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
  7. வறுத்த கோழித் துண்டுகள் உள்ள கடாயில், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து, மேலும் 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
  8. சுவைக்கு ஏற்ப (சுமார் 1 தேக்கரண்டி உப்பு) உப்பு சேர்க்கவும்.
  9. கிரீம், அரைத்த முந்திரி மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  10. அதை சுமார் 3-4 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
  11. கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
சப்பாத்தி/ நாண் /பரோட்டா அல்லது எந்தவகை கோதுமை ரொட்டி க்கும் ஏற்றது. மாறுபாட்டிற்கு,<a href="/recipes/Channa-masala">கொண்டைக்கடலை மசாலா</a>, <a href="/recipes/Paneer-butter-masala">பன்னீர் பட்டர் மசாலா</a>, <a href="/recipes/bhindi-masala"> வெண்டிக்காய் மசாலா </a>அல்லது<a href="/recipes/Aloo-Gobi">ஆலு கோபி</a> ஆகியவற்றை முயற்சிக்கவும்.