இறைச்சி உடன் முட்டைக்கோஸ்
recipe Image
 
இறைச்சி உடன் முட்டைக்கோஸ் ஆனது, ஓர் சிறப்பான நிகழ்ச்சியில் பல உணவுகளில் ஒன்றாகக்கூடிய உணவு ஆகும். இறைச்சியின் மணம் முட்டைக்கோஸிற்கு நல்ல சுவையைச் சேர்க்க, இறைச்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் சுவை ஒன்றுக்கொன்று நன்கு கலந்து எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • முட்டைக்கோஸ் நடுத்தர அளவு - 1/2
  • எலும்பற்ற ஆட்டுக்கறி - 200 கிராம் சிறு துண்டுகளாக வெட்டியது
  • கடலை பருப்பு - 1/4 கப் அல்லது 50 கிராம்
  • வெங்காயம் - 1 அல்லது 150 கிராம்
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1
  • தேங்காய் பால் - 100 மி.லி
  • பட்டை - 1/2 அங்குல நீளமானது
  • ஏலக்காய் - 1
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - அலங்கரிப்பதற்காக சில தழைகள்

மசாலா பொடிகள்:

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
Method:
  1. சுமார் 30 நிமிடங்கள் கடலை பருப்பை ஊறவைக்கவும்.
  2. மிதமான வெப்பத்தில் 1 லிட்டர் பிரஷர் குக்கர் சட்டியை வைக்கவும்.
  3. எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் போதுமான வெப்பமடையும் போது, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
  4. வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கவும். நறுக்கப்பட்ட இறைச்சியை சேர்த்து பழுப்பு நிறம் வரும்வரை வதக்கவும்.
  5. நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ் மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்க்கவும்.
  6. அவற்றை நன்கு கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும்.
  7. இப்போது ஊறவைத்த கடலை பருப்பு, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்க்கவும்.
  8. மூடி வைத்து, 2-3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
  9. நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
ஏலக்காயை எடுத்து விட்டு பரிமாறவும்.