முட்டைக்கோஸ் பொரியல்
| |
|
|
இது எல்லாவிதமான குழம்பிற்கும் ஏற்றப் பொரியல் ஆகும். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
4-5
|
Ingredients: |
- முட்டைக்கோஸ் - 200 கிராம் அல்லது 1/3 நடுத்தர அளவு
- வெங்காயம் - 75 கிராம் அல்லது 1 சிறியது
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 5-6
- காய்ந்த மிளகாய் - நடுத்தர காரமானது - 2 / மிகவும் காரமானது - 1
- சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி (விருப்பமானால்)
- தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி (விருப்பமானால்)
- எண்ணெய் - 3-4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் - தேவைக்கேற்ப
|
Method: |
- முட்டைக்கோஸை சுத்தம் செய்து பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கவும்; மிளகாயை 3-4 துண்டங்களாகப் உடைத்து வைக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயினை சூடேற்றி, எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும் .
- நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்; சில நிமிடங்கள் வறுக்கவும்.
- ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மூடியிட்டு சுமார் 5-10 நிமிடங்கள் வேகவிடவும்.
- சமைக்கும் போது, கடாயின் கீழே காய்கறிகள் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க, மூடியைத் திறந்து, காய்கறியை சில முறைக் கிளறவும்.
- முட்டைக்கோஸ் சமைக்கப்பட்ட பின், சீரகத் தூள் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
- தேங்காய்த் துருவல் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
|
Notes: |
உங்களுக்கு பச்சை மிளகாய் விருப்பமானால், காய்ந்த சிவப்பு மிளகாய்க்குப் பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தவும். சாதம் <a href="/recipes/Tamarind-vegetable-curry">காய்கறி புளிக் குழம்பு</a>, <a href="/recipes/Garlic-curry"> பூண்டு குழம்பு</a>, <a href="/recipes/Tamarind-egg-Curry"> முட்டை புளிக் குழம்பு</a> அல்லது <a href="/recipes/Tamarind-egg-omlette-curry"> ஆம்லெட் புளிக் குழம்பு</a> ஆகியவற்றுக்கு ஏற்றது. |