கத்தரிக்காய் பொரியல்
recipe Image

இது சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு ஏற்ற பொரியல் ஆகும்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
• கத்திரிக்காய் - 300 கிராம்
• உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
• கருவேப்பிலை – 1 கொத்து
• உப்பு - சுவைக்கு
• எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி

வறுத்து

• அரைக்க வேண்டியவை:
• உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
• தனியா - 1 தேக்கரண்டி
• காய்ந்த மிளகாய் - 2
• Method:
1. கத்திரிக்காயை கழுவி, உலர்ந்தவும். ஒவ்வொரு கத்தரிக்காயையும் 2" நீண்ட துண்டுகளாக வெட்டவும்.
2. அடுப்பில், ஒரு கடாயினை சூடாக்கவும்; உளுத்தம் பருப்பு, தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, தங்க பழுப்பு நிறம் வரும் வரை அவற்றை வறுக்கவும். அவை போதுமான அளவு குளிர்ந்ததும், கரகரப்பான தூளாக அவற்றை அரைக்கவும்.
3. அடுப்பில், ஒரு கடாயினை வைத்து சூடேற்றி, எண்ணெய் சேர்க்கவும்.
4. உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை கொண்டு தாளிக்கவும்.
5. காய்கறி மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
6. அரைத்தத் தூளைச் சேர்க்கவும்.
7. மூடியிட்டு, சுமார் 8-10 நிமிடங்கள் சமைக்கவும்.
8. அவை வேகும் நேரத்தில், அவ்வப்போது காய்கறிகளைக் கிளறவும்.
9. காய்கறிகள் வெந்தவுடன், அவற்றை முறுகலாகச் செய்ய மேலும் 6-7 நிமிடங்கள் வறுக்கவும்.
10. அவை கடாயின் கீழே கரிவதைத் தடுக்க, சில முறை கிளறவும்.
11. அவை தயாரானதும், ஒரு பரிமாறும் பாத்திரத்தில் அவற்றை பரிமாறவும்.
12. குறிப்பு: உளுத்தம் பருப்பு, தனியா மற்றும், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அரைப்பதற்கு பதிலாக இட்லி பொடி 3 தேக்கரண்டியை சேர்த்து சமைக்கலாம்.
Notes:
சாதம் மற்றும்  ஆட்டுக்கறி குழம்பு, கோழி குழம்பு,ரசம், மோர் குழம்பு அல்லது சாம்பார் ஆகியவற்றுக்கு ஏற்றது.