காலிஃபிளவர் மஞ்சூரியன்
recipe Image
 
காலிஃபிளவர் மஞ்சூரியன் என்பது ஒரு சுவையான இந்திய-சீன வகை உணவாகும். சைவ உணவோடு இதை செய்தால் சாதாரண சாப்பாடும் விருந்து சாப்பாடு போல் சிறப்பாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:

    ஊற வைக்க தேவையான பொருட்கள்

    • காலிபிளவர் (சிறியது) - 1 (300 கிராம்)
    • மைதா மாவு - 3 டேபில் ஸ்பூன்
    • கார்ன் மாவு(corn flour) - 3 டேபில் ஸ்பூன்
    • மிளகாய் தூள் - 1 and 1/2 டீஸ்பூன்
    • தந்தூரி மசாலா தூள் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
    • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    • ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை ( விரும்பினால்)
    • தயிர் - 1 டேபில் ஸ்பூன்
    • உப்பு - தேவைக்கேற்ப

    குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

    • வெங்காயம் - 1 சிறியது
    • பூண்டு - 2 பல்
    • பச்சை மிளகாய் - 2
    • கொத்தமல்லித் தழை (சிறிதாக நறுக்கியது) – 1 டேபில் ஸ்பூன்
    • தக்காளி சாஸ் - 5 டேபில் ஸ்பூன்
    • சோயா சாஸ் - 2 டேபில் ஸ்பூன்
    • எண்ணெய் - 1 டேபில் ஸ்பூன்
    • எண்ணெய் - 300 மி.லி வறுக்க
    Method:
    1. காலிஃபிளவரை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு, சிறு சிறு பூக்களாக அதை வெட்டி வென்னீரில் 3-4 நிமிடங்கள் ஊற போடவும்.
    2. ஊற வைக்க தேவையான பொருட்கள் பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீரையும் சேர்த்து கலக்கவும். காலிஃபிளவரை இதில் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது ஊற வைக்கவும்.
    3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது சூடானதும் அதில் சிறிது எண்ணெய் விடவும்.
    4. எண்ணெய் சூடானவுடன், 5-6 காலிஃபிளவர் பூக்கள் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து, துளையிட்ட கரண்டியால் சட்டியில் இருந்து எண்ணெயை வடிகட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மாரினேட்டை தனியாக வைக்கவும்.
    5. வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சிறிதாக நறுக்கவும்.
    6. ஒரு பெரிய இருப்புச் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாக சூடேற்றி சிறிது எண்ணையை சேர்க்கவும்.
    7. எண்ணெய் சூடானவுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
    8. தக்காளி சாஸ், சோயா சாஸ், 3 மேசைகரண்டி மாரினேட் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
    9. உப்பு மற்றும் வறுத்தெடுத்த காலிஃபிளவர் பூக்களை சேர்த்து நன்றாக கிளறி 3-4 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவிடவும்.
    10. கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்.