காலிஃபிளவர் பொரியல்
recipe Image
 
இது எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • காலிபிளவர் (சிறியது) - 1 (300 கிராம்)
  • வெங்காயம் நறுக்கியது - 1 டேபில் ஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - 6 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப
Method:
  1. காலிஃபிளவரை கழுவி சுத்தம் செய்து சிறு பூக்களாக நறுக்கவும். வெங்காயத்தை கொஞ்சம் பெரியதாக நறுக்கவும்.
  2. காலிஃபிளவர் பூக்களை தனியாக ஒரு ஒரு கோப்பையில் வைத்து சூடான தண்ணீரை ஊற்றி 3-4 நிமிடங்களுக்கு விட்டு வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டவும்.
  3. இருப்புச் சட்டியை ஒரு அடுப்பில் வைத்து சூடாக்கி பிறகு கொஞ்சம் எண்ணெய்யை அதில் விடவும்.
  4. எண்ணெய் சூடானதும், அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வறுக்கவும்.
  5. சிறுபூக்களாக வெட்டிய காலிஃபிளவரை சட்டியில் சேர்த்து, அத்துடன் 1/2 தேக்கரண்டி உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  6. சட்டியை மூடி சுமார் 5-6 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  7. காய் வேகும்போது சட்டியின் அடியில் காய்கறி ஒட்டிக்கொள்வதை தவிர்க்க ஓரிரு முறை கிளறவும்.
  8. காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு, சீரகத் தூளை சேர்த்து மேலும் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
Notes:
சாதத்துடன்<a href="/recipes/Lambstew"> ஆட்டுக்கறி குழம்பு </a> அல்லது <a href="/recipes/Chicken-Curry"> கோழிக் குழம்பு</a>ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.